A-AA+
×
Go-Top

Thiruppani

கம்பிவட ஊர்திகள்


பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்காக முதல் முறையாக நான்கு கோடி ரூபாய் செலவில் கம்பிவட ஊர்தி அமைத்திட மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஆணையிடப்பட்டு 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் நாள் கம்பிவட ஊர்தி சேவை தொடங்கப்பட்டது. இந்தக் கம்பிவட ஊர்தி பக்தர்களின் வரவேற்பு பெற்றதையடுத்து, பழநி திருக்கோயிலுக்கு மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களது ஆணையின் படி சர்வதேசத் தரத்தில் மேலும் ஒரு கம்பிவட ஊர்தி அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சோளிங்கர் அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் மற்றும் கரூர் மாவட்டம் அய்யர்மலை அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் ஆகியவற்றுக்கு புதிதாக கம்பிவட ஊர்தி அமைத்திட ஒப்பந்தம் ஏற்படுத்தி நடவடிக்கையிலுள்ளது.


திருப்பணி


வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த திருக்கோயில்கள், ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் பாடிப் புகழப்பட்ட திருக்கோயில்கள், பிரார்த்தனை முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்கள், கிராமப்புறங்களில் அமைந்துள்ள சிறு திருக்கோயில்கள், ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளிலுள்ள சிறு சிறு திருக்கோயில்கள் ஆகிய பல்வேறு புணிதமான திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவற்றினை திருப்பணி செய்து புதுப்பிக்கும் பணி இன்றியமையாததாகும்.

இதனை கருத்தில் கொண்டு, கீழ் கண்ட நிதிகள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன:

  1. பொதுமக்கள் அளிக்கும் நன்கொடை
  2. திருக்கோயில்களின் சொந்த நிதி
  3. நிதிமாற்ற நிதி
  4. அரசு மானியம்
  5. பொதுநல நிதி
  6. ஆலய மேம்பாட்டு நிதி
  7. கிராமப்புறத் திருக்கோயில்கள் திருப்பணி நிதி
  8. திருக்கோயில் திருப்பணி மற்றும் அறப்பணிநிதி
  9. உபயத் திருப்பணி
  10. நிதி ஆணைய மானியம்
  11. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதி
  12. சுற்றுலாத்துறை நிதி

  1. பொதுமக்கள் அளிக்கும் நன்கொடை

  2. இறை நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் சமய ஈடுபாடு கொண்டோர், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் மனமுவந்து அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டு பெரும்பாலான திருப்பணிகள் நடைபெறுகின்றன.

  3. திருக்கோயில் நிதி

  4. பல்வேறு திருக்கோயில்களின் திருப்பணி அவற்றின் நிதியிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.

  5. நிதி மாற்றம்

  6. நிதிவசதி மிக்க திருக்கோயில்களின் உபரிநிதியிலிருந்து, நிதி தேவையான திருக்கோயில்களுக்குத் திருப்பணிகளை மேற்கொள்ள இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் 36-வது பிரிவின் கீழ் நிதி மாற்றம் மூலமாக நிதியுதவி வழங்கப்படுகிறது.

  7. அரசு மானியம்

  8. அரசு மானியமாக ஆண்டுதோறும் திருக்கோயில்களின் திருப்பணிக்கென ஆறுகோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

  9. பொதுநல நிதி

  10. ஆணையரின் பதவிப் பெயரில் `பொதுநல நிதி` என்ற நிதியம் தனிநபர்கள் தானாக முன் வந்து அளிக்கும் நன்கொடை மற்றும் இந்துசமய நிறுவனங்களின் பங்களிப்பு தொகை ஆகியவற்றைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு பொதுநல நிதி மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

  11. ஆலய மேம்பாட்டு நிதி

  12. நிதி வசதி மிகுந்த திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து திருக்கோயில்களின் மேம்பாட்டிற்காக எட்டு கோடி ரூபாய் பெற்று மூலநிதி ஏற்படுத்தப்பட்டது. இம்மூல நிதியிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையிலிருந்து தொன்மை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

  13. கிராமப்புறத் திருக்கோயில்கள் திருப்பணி நிதி

  14. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சிறு கிராமப்புறத்திருக்கோயில்களின் புனரமைப்புப் பணிக்கு நிதியுதவி வழங்கிட `கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணித் திட்டம்` என்ற திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கென பழநி, அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபரிநிதியிலிருந்து இரண்டு கோடி ரூபாய் நிதி மாற்றம் செய்து மூல நிதி ஏற்படுத்தப்பட்டது. இம்மூல நிதியிலிருந்து கிடைக்கும் வட்டியிலிருந்து திருக்கோயில் ஒன்றுக்கு ரூ.1,00,000/-வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

  15. உபயத் திருப்பணி

  16. `முதலமைச்சர் திருக்கோயில் திருப்பணி மற்றும்பராமரிப்புநிதி` என்ற நிதியத்தினை மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 05.08.1991-ல் உருவாக்கினார். இந்நிதி அமைப்புக்குத் தமது சொந்த பணத்திலிருந்து ரூ.1,00,008/-ஐ நன்கொடையாக மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அளித்தார்கள். இந்நிதிக்கு தொண்டுள்ளம் கொண்டோர், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் பெறப்பட்டன. இந்நிதியமைப்பு `திருக்கோயில் திருப்பணிமற்றும் அறப்பணிநிதி` என்று தற்போது அழைக்கப்படுகிறது. இந்நிதி மூலம் திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

  17. உபயத் திருப்பணி

  18. பக்தர்கள் தாமே முன் வந்து தனது சொந்த செலவிலும், துறை மேற்பார்வையிலும் திருக்கோயில்களுக்குத் திருப்பணி செய்வது வழக்கத்திலுள்ளது.

  19. நிதி ஆணைய மானியம்

  20. தொன்மை வாய்ந்த திருக்கோயில்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பிக்க மத்திய அரசின் 12-வது நிதி ஆணையம் ரூ.9.87 கோடி நிதியுதவி வழங்கியது. இந்த நிதி மூலம் 46 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்யப்பட்டது. தொன்மை வாய்ந்த திருக்கோயில்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பிக்க மத்திய 13-வது நிதி ஆணையம் வழங்கிய ரூ.22,50 கோடி நிதியுதவி மூலம் 89 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்யப்பட்டு வருகிறது.

  21. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள திருக்கோயில்கள் திருப்பணி

    இந்து சமய அற நிலையத்துறை ஆளுகையில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள சிறு திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட நிதி மிகுந்த திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து நிதி பெறப்பட்டு திருக்கோயில் ஒன்றுக்கு ரூ.1,00,000/- வீதம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

  22. சுற்றுலாத் துறை நிதி

  23. இந்து சமய அற நிலையத்துறை ஆளுகையில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள சிறு திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட நிதி மிகுந்த திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து நிதி பெறப்பட்டு திருக்கோயில் ஒன்றுக்கு ரூ.1,00,000/- வீதம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.


திருக்குட முழுக்கு


பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் ஆகம விதிப்படி ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். இதனடிப்படையில் திருக்கோயில்கள் கீழ்க்கண்டவாறு வகை செய்யப்பட்டு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தப்படுகின்றன:

  1. ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப் பெற்ற மற்றும் நாயன்மார்களால் பாடப்பெற்ற பழமை வாய்ந்த திருக்கோயில்கள்

  2. வரலாற்றுப் புகழ் பெற்ற மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்கள்.

  3. பிரார்த்தனை முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்கள்.

  4. கிராமப்புறங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள சிறு திருக்கோயில்கள்.

ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப் பெற்ற மற்றும் நாயன்மார்களால் பாடப்பெற்ற திருக்கோயில்கள் தமிழ் நாட்டில் பெருமளவில் உள்ளன. மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபின் இந்த திருக்கோயில்கள் மற்றும் 1006 திருக்கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டுள்ளார்.


திருக்குளங்களை புதுப்பித்து திருப்பணி செய்தலும், மழைநீர் சேகரிப்பும்


மழைநீர் சேகரிப்புத் திட்டம், 2002-2003 ஆண்டில் மேதகு ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஒரு திட்டமாக திருக்கோயிலுக்கு சொந்தமான குளங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்துசமய அற நிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழுள்ள 42,395 திருக்கோயில்களில் 1586 திருக்கோயில்களுக்கு 2359 திருக்குளங்கள் உள்ளன.இவைகளில் 1291 திருக்குளங்கள் நல்ல நிலையில் உள்ளன, மீதமுள்ள 1068 திருக்குளங்கள் புனரமைப்பு செய்து மழைநீர் சேகரிக்க வேண்டிய நிலையில் இருந்தன. இத்திட்டத்தின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இவ்வரசு பொறுப்பேற்ற பின்னர் இத்திட்டத்தினை புதுப்பித்திட கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  1. திருக்குளங்களின் உள்ளும் புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்.
  2. திருக்குளங்களைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்தல்
  3. தூர் எடுத்தல் மற்றும் ஆழப்படுத்துதல்
  4. திருக்குளங்களில் உள்ள படிகளைச் சீரமைத்தல்
  5. திருக்குளங்களுக்கு மழைநீர் வருவதற்கு வழி ஏற்படுத்துதல் மற்றும் உபரிநீர் வெளியேற்றுதல்

தங்கரதம் மற்றும் வெள்ளிரதம்


திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உற்சவமூர்த்தியை தங்க ரதத்திலோ, வெள்ளி ரதத்திலோ எழுந்தருளச் செய்து ரதம் இழுப்பது நீண்டகால வழக்கத்தில் உள்ளது. தற்போது கீழ்க்காணும் 63 திருக்கோயில்களில் தங்கரதமும் 49 திருக்கோயில்களில் வெள்ளிரதமும் பயன்பாட்டில் உள்ளன.


தங்கரதம் உள்ளதிருக்கோயில்கள் விவரம்

வ. எண் திருக்கோயில் பெயர்

1.     

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி   

2.     

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், பூங்காநகர், சென்னை          

3.     

அருள்மிகு வடபழனியாண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை

4.     

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி 

5.     

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு      

6.     

அருள்மிகு சுவாமிநாத சுவாமிதிருக்கோயில், சுவாமிமலை 

7.     

அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில், வைத்தீஸ்வரன்

கோயில்         

8.     

அருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சநாரி, கோயம்புத்தூர்        

9.     

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி

10.   

அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை  

11.   

அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில், சங்கரன்கோயில்

12.   

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்         

13.   

அருள்மிகு வானமாமலைப் பெருமாள் திருக்கோயில், நாங்குநேரி   

14.   

அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம்      

15.   

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், இரத்தினகிரி          

16.   

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவன்மலை           

17.   

அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர்           

18.   

அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், மாங்காடு         

19.   

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்          

20.   

அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர்    

21.   

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை 

22.   

அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி           

23.   

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

24.   

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை

25.   

அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், திண்டல்மலை, ஈரோடு

26.   

அருள்மிகு அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில், அடையாறு,

சென்னை       

27.   

அருள்மிகு கருநெல்லிநாதசுவாமி திருக்கோயில், திருத்தங்கல்,

சிவகாசி         

28.   

அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில், மயிலாப்பூர்,

சென்னை       

29.   

அருள்மிகு வேங்கடாஜலபதி திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோயில், கும்பகோணம்           

30.   

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம்    

31.   

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கரூர்           

32.   

அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்         

33.   

அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில், ஓசூர் 

34.   

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜெம்புகேஸ்வரர்

திருக்கோயில், திருவானைக்காவல்   

35.   

அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், நாமக்கல்       

36.   

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பச்சைமலை,

கோபிசெட்டிபாளையம்         

37.   

அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில்,

அரியாக்குறிச்சி

38.   

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில்,

திருநெல்வேலி           

39.   

அருள்மிகு கண்ணுடைய நாயகியம்மன் திருக்கோயில்,

நாட்டரசன்கோட்டை, சிவகங்கை

40.   

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்,

திருச்செங்கோடு, நாமக்கல்

41.   

அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர்,

திருச்சிராப்பள்ளி       

42.   

அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில், சேலம்  

43.   

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம்   

44.   

அருள்மிகு முருகன் திருக்கோயில், சோலைமலை

மண்டபம், அழகர்கோயில், மதுரை

45.   

அருள்மிகு இலட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர்,

வேலூர்           

46.   

அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர்       

47.   

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்       

48.   

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், மேல்மலையனூர்,

விழுப்புரம்மாவட்டம் 

49.   

அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன் திருக்கோயில், பாரியூர்,

ஈரோடு மாவட்டம்     

50.   

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர்,

காஞ்சிபுரம்

51.   

அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை,

52.   

அருள்மிகு திருமலைக் குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி,

திருநெல்வேலிமாவட்டம்       

53.   

அருள்மிகு ஆண்டாள் (நாச்சியார்) திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர்          

54.   

அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயில், மடப்புரம், சிவகங்கை மாவட்டம்      

55.   

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், பேளூர், சேலம்

மாவட்டம்

56.   

அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,

சுக்கிரவார்பேட்டை, கோயம்புத்தூர்

57.   

அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில், சிவகாசி

நகர், விருதுநகர்

58.   

அருள்மிகு ஆமருவிப்பெருமாள் திருக்கோயில்,

தேரழுந்தூர், நாகப்பட்டினம்

59.   

அருள்மிகு பூங்கா முருகன் திருக்கோயில்,

தல்லாக்குளம், மதுரை

60.   

அருள்மிகு வாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில்,

விருதுநகர்

61.   

அருள்மிகு சண்முகநாதசுவாமி திருக்கோயில், குன்றக்குடி (கேடகம்/சப்பரம்)

62.   

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவப்பூர்,

புதுக்கோட்டை

63.   

அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில்,

நாகப்பட்டினம்.

 

வெள்ளிரதம் உள்ள திருக்கோயில்கள் விவரம்

வ. எண் திருக்கோயில் பெயர்

1.     

அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், பழநி

2.     

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்

3.     

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை

4.     

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணி

5.     

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்

6.     

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

7.     

அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில், சுவாமிமலை

8.     

அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்

9.     

அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர்

10.   

அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், வைத்தீஸ்வரன்கோயில்

11.   

அருள்மிகு சட்டநாதசுவாமி திருக்கோயில், சீர்காழி

12.   

அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை

13.   

அருள்மிகு மாரியம்மன், அங்காளம்மன் திருக்கோயில்,பொள்ளாச்சி

14.   

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை

15.   

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு

16.   

அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர்

17.   

அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்

18.   

அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம்

19.   

அருள்மிகு முத்துகுமாரசுவாமி திருக்கோயில், பூங்காநகர், சென்னை

20.   

அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில், அரியக்குடி

21.   

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குன்றக்குடி

22.   

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கீழச்செவல்பட்டி

23.   

அருள்மிகு கண்ணுடையநாயகியம்மன் திருக்கோயில், நாட்டரசன்கோட்டை

24.   

அருள்மிகு கொப்புடையநாயகியம்மன் திருக்கோயில், காரைக்குடி

25.   

அருள்மிகு நகரசிவன் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், தேவக்கோட்டை

26.   

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர், திருமயம்

27.   

அருள்மிகு ஆருத்ரகபாலீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு

28.   

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி

29.   

அருள்மிகு பழநியாண்டவர் திருக்கோயில், பவானி

30.   

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆயக்குடி, திருநெல்வேலி

31.   

அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர்

32.   

அருள்மிகு சிவ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், நெய்வேலி, பண்ருட்டி

33.   

அருள்மிகு வெயிலுக்கு உகந்த விநாயகர் திருக்கோயில், உப்பூர், இராமநாதபுரம்மாவட்டம்

34.   

அருள்மிகு சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல்

35.   

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குமரக்கோட்டம், காஞ்சிபுரம்

36.   

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், எட்டுக்குடி, நாகப்பட்டினம் மாவட்டம்.

37.   

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், செட்டிக்குளம், பெரம்பலூர் மாவட்டம்

38.   

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்

39.   

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், தங்கசாலை, சென்னை

40.   

அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

41.   

அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை

42.   

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவந்திபுரம், திருவண்ணாமலை மாவட்டம்

43.   

அருள்மிகு சேவுகப்பெருமாள் திருக்கோயில், சிங்கம்புணரி, சிவகங்கை

44.   

அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில்,பாலாற்றங்கரை, வேலூர்

45.   

அருள்மிகு நவநீதேஸ்வரசுவாமி திருக்கோயில், சிக்கல், நாகப்பட்டினம்

46.   

அருள்மிகு காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயில்,சென்னை

47.   

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை

48.   

அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், திருகோகர்ணம் , புதுக்கோட்டை

49.   

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், கோயில்கந்தன்குடி, திருவாரூர்.

மரத்திருத்தேர் பராமரிப்பு


இந்து சமய அற நிலையத்துறையின் கீழுள்ள திருக்கோயில்களில் 809 திருக்கோயில்களுக்குச் சொந்தமாக 989 மரதிருத்தேர்கள் உள்ளன. 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில், நிதிவசதி மிக்க திருக்கோயில்களின் உபரிநிதி மூலம் திருத்தேர்கள் திருப்பணிக்காக (பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல்) ரூ.10.50 கோடி நிதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிதியிலிருந்து 91 திருத்தேர்கள் புதுப்பிக்கப்பட்டது. தற்போது, 686 திருத்தேர்கள் நல்ல நிலையில் உள்ளன. மீதமுள்ள 303 திருத்தேர்களில் 25 திருத்தேர்களின் திருப்பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 278 திருத்தேர்கள் திருப்பணி செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருத்தேர்களைப் பாதுகாக்கும் பொருட்டு தீப்பிடிக்காத தகடுகளால் ஆன தேர்கொட்டகை, இரும்பு அச்சு, இரும்புச்சக்கரம் ஆகியவற்றைச் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட தேரோட்ட விழாக்களை நடத்தவும் திருத்தேர்களை பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பட்டயப் பொறியாளர்கள்


திருக்கோயில்களின் திருப்பணிகளை மேற்கொள்வதற்கான மதிப்பீடுகள் தயாரித்தளிப்பதில் தாமதம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, பொதுப்பணித்துறையிலும் நெடுஞ்சாலைத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர்கள் பட்டயப் பொறியாளர்கள் அங்கீரிகரிக்கப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட பட்டயப் பொறியாளர்கள் மூலமாக திருக்கோயில்களைச் சீரமைப்பதற்குரிய கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான வரை படங்கள், மதிப்பீடுகள் தயார் செய்யவும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


ஸ்தபதிகள்


சிற்ப சாத்திர மற்றும் ஆகம சாத்திர விதிகளில் வரையறுக்கப்பட்டபடி திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தம் முன்னோர் மூலம் வழி வழியாக இக்கலையை நன்கு கற்றறிந்தோர், சிற்ப சாத்திரக் கலையில் பட்டம் அல்லது பட்டயம் பெற்றுள்ளோர் ஆகியோர் ஸ்தபதிகளாக அங்கீகாரம் செய்யப்படுகின்றனர்.