Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில், ஆலங்குடி - 612801, தி௫வாரூர் .
Arulmigu Abathsagayeswaraswamy Temple, Alangudi - 612801, Thiruvarur District [TM014252]
×
Temple History

தல பெருமை

இத்திருக்கோயில் காவிரி நிதியின் கிளை நதியான வெட்டாறு கரையிலிருந்து 1 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. பார்க்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்து இரட்சித்தமையால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயரும் ஏற்பட்டது. அசுரர்களால் தேவருக்கு நேர்ந்த இடுக்கண்களை களைந்து காத்தமையால் இத்தல விநாயகருக்கு கலங்காமற் காத்த விநாயகர் என பெயர் உண்டாயிற்று. அம்மையார் தவம் செய்து இறைவனை திருமணம் செய்து கொண்ட சிறப்பை உடையது. அம்மை திருமணம் நடந்த இடத்திற்கு இன்று திருமண மங்கலம் எனப் பெயர் வழங்கப்பெறுகிறது. மத்தியார்சுனம் ஆகிய திருவிடைமருதூர் மகாலிங்கப்பெருமானுக்கு பரிவாரத்தலமாக விளங்குகிறது. பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களில் நான்காவதாக சாயரட்சைக்கு உகந்த திருத்தலமாக விளங்குகிறது. முசுகுந்த சக்ரவர்த்தியின்...


Temple Opening & Closing Timings
06:00 AM IST - 01:00 PM IST
04:00 PM IST - 09:00 PM IST
இத்திருக்கோயில் அதிகாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு நடை சாற்றப்பட்டு, மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு நடை சாற்றப்படும். வியாழக்கிழமை மட்டும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு நடை சாற்றப்படும்.