Screen Reader Access     A-AA+
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி - 624601, திண்டுக்கல் .
Arulmigu Dhandayuthapaniswamy Temple, Palani - 624601, Dindigul District [TM032203]
×
Temple History

தல வரலாறு

கந்தரலங்காரம் படிக்கின்றிலை பழனித் திருநாமம் படிப்பவர்தாள் முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமலிட்டு மிடிக்கின்றிலை பரமானந்த மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே திருமலையின் சிறப்பு திருவருள் ததும்பியது தமிழகம். இங்கு இறைவன் அருள் விளக்கம் மிகுதியும் பெற்ற திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றுள்ளே தொன்மைச் சேரனும், தென்னவனாகிய பாண்டியனும் ஒருங்கு போற்றிய கொங்கு வைகாவூர் நாட்டுப் பழம் பதியாகிய பழனி காலவரையறைக்குட்படாத பழமையும், பெருமையுமுடையது. இன்னும், தமிழ் இலங்கியங்களில் `சித்தன் வாழ்வு` எனச் சிறப்பிக்கப் பெற்றது. மலைமேல் மருந்தாகிய ஞானதண்டாயுதபாணியின் அருள் திருமேனியை நிர்மாணித்த காலம் காலவரையறையில் அகப்பட்டதன்று. அத்திருமேனியைத் தரிச்த்த பேறு மக்களின் பிறவிப் பணியையகற்றி உலகப் பெரும்பேற்றில் இன்றும் என்றும் ஈடுபடுத்துவது. திருமலையின் அமைப்பு பழனிப் பொருப்பினன்றும் சுமார் நான்கு கி.மீ தூரத்தில்...

தல பெருமை

ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் `பழம் நீ ` (பழனி) என...

இலக்கிய பின்புலம்

சங்ககால இலக்கியங்களில் பொதினி என்று அழைக்கப்பட்ட ஸ்தலமே பிற்காலத்தில் பழனி என்று அழைக்கப்படுகிறது. மலைக்கோயில் கற்ப கிரஹம் 9ஆம் நூற்றாண்டில் சேரமான் பெருமான் என்ற சேர மன்னரால் நிறுவப்பட்டது. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு திருஆவினன்குடி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடு ஆகும். அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மூலவர் 9 வகையான மூலிகை கலவையால் (வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாசனம், வெள்ளை பாசனம், மிர்தரசிங், சிலசாத்)போகர் சித்தரால் ஸ்தாபிக்கப்பட்டது. எனவே தான், மூலவரின் அபிஷேக பிரசாதங்கள் (பால், பஞ்சாமிர்தம்) நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.


Temple Opening & Closing Timings