அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - 628215, தூத்துக்குடி .
Arulmigu Subramania Swamy Temple, Tiruchendur - 628215, Thoothukudi District [TM038271]
×
Temple History
தல வரலாறு
முன்னொரு காலத்தில் சூரபத்மன் எனும் அசூரன் வீரமகேந்திரபுரி எனும் தீவு ஒன்றை ஆண்டு வந்தான். அவன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் ஆவான். அவன் சிவனை நோக்கி பல கடுந்தவங்கள் புரிந்து சிவனின் அருளையும் பல வரங்களையும் பெற்றிருந்தான்.
நாளடைவில் ஆணவமும் அகங்காரமும் கொண்ட சூரபத்மன் மூன்று உலகையும் கைப்பற்றி தேவர்களையும் மற்ற மனிதர்களையும் மற்ற ஜூவராசிகளையும் சிறைபிடித்து துன்புறுத்தி வந்தான். துன்பம் தாங்காது தேவர்கள் சிவனிடம் வந்து முறையிட்டனர். இந்நிலையில் சிவபெருமான் தேவர்களின் துயரை போக்கவும் சூரபத்மனை அழிக்கவும் முடிவு செய்தார். அதனால் தனது நெற்றிக்கண்ணிலிருந்து நெருப்பினை வெளியிட அதனை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெறுப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக அவதரித்து ,...முன்னொரு காலத்தில் சூரபத்மன் எனும் அசூரன் வீரமகேந்திரபுரி எனும் தீவு ஒன்றை ஆண்டு வந்தான். அவன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் ஆவான். அவன் சிவனை நோக்கி பல கடுந்தவங்கள் புரிந்து சிவனின் அருளையும் பல வரங்களையும் பெற்றிருந்தான்.
நாளடைவில் ஆணவமும் அகங்காரமும் கொண்ட சூரபத்மன் மூன்று உலகையும் கைப்பற்றி தேவர்களையும் மற்ற மனிதர்களையும் மற்ற ஜூவராசிகளையும் சிறைபிடித்து துன்புறுத்தி வந்தான். துன்பம் தாங்காது தேவர்கள் சிவனிடம் வந்து முறையிட்டனர். இந்நிலையில் சிவபெருமான் தேவர்களின் துயரை போக்கவும் சூரபத்மனை அழிக்கவும் முடிவு செய்தார். அதனால் தனது நெற்றிக்கண்ணிலிருந்து நெருப்பினை வெளியிட அதனை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெறுப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக அவதரித்து , ஆறு குழந்தைகளும் கார்த்திகை பெண்களால் சீரும் சிறப்புமாக வளர்த்து வரப்பட்டது.
இந்நிலையில் பார்வதி அம்பாள் சிவபெருமானுடன் சரவணப்பொய்கையில் எழுந்தருளி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அரவணைத்து ஆறு முகம், பண்ணிரண்டு திருக்கரங்கள் கொண்ட ஒரே குழந்தையாக முருகப்பெருமானை உருவாக்கினர்.
பாலகனாகிய முருகப்பெருமான் வளர்ந்து வந்த நிலையில் சிவபெருமான் முருகக் கடவுளின் முன்தோன்றி சூரபத்மனையும் அவனைச் சார்ந்த அசுரர்களையும் அழித்து தர்மத்தை நிலைநாட்ட புறப்படுவாயாக என்று அன்பு கட்டடையிட்டார்.
அதனை தொடர்ந்து முருகப்பெருமான் தனது படைத்தளபதியான வீரபாகுவினை சூரபத்மனிடம் அனுப்பி தேவர்களையும் மற்ற ஜுவராசிகைளையும் விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த சூரபத்மனோ முருகப்பெருமானிடம் போரிட முடிவு செய்தான். அதனால் தனது படை பலங்களுடன் திருச்செந்தூர் கடற்கரைக்கு வந்தடைந்து தனது படை பாசறையை முருகப்பெருமான் அமைத்தார். பார்வதி தேவியின் பாதசிலம்பில் இருந்து தோன்றிய நவ வீரர்களும் முருகனின் படைத்தளபதிகளாக விளங்கினர்.முருகப்பெருமானின் படைகள் ஏழு கடல்களையும் கலக்கி ஆரவாரத்துடன் புறப்பட்டனர்.
வெற்றி சங்கு முழங்கியது. முதல் ஐந்து நாள் போரில் சூரபத்மனின் சகோதரர்கள் , மகன்கள் கொல்லப்பட்டனர். ஆறாம் நாள் போரின் முடிவில் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை தன் சக்தியாகிய வேலால் இரண்டாக பிளவு செய்ய சேவலாகவும் மயிலாகவும் மாறியது. சேவலை தன் கொடியாகவும் , மயிலை தனது வாகனமாகவும் முருகப்பெருமான் ஏற்றுக்கொண்டது இத்தல சிறப்பு.
Temple Opening & Closing Timings
05:00 AM IST - 12:00 PM IST
12:00 PM IST - 09:00 PM IST
அதிகாலை 05 மணி முதல் இரவு 09 மணி வரை தொடர்ந்து நடைதிறந்தே இருக்கும். திருவிழா காலங்களில் நடைதிறப்பு நேரம் மாறுதலுக்குட்பட்டது.