இந்து சமய நிறுவனங்களின் நிருவாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் 1925-ஆம் ஆண்டிற்கு முன்னரே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 1925-ஆம்ஆண்டில் `இந்து சமய அறநிலைய வாரியம்` ஏற்படுத்தப்பட்டது. இந்து திருக்கயில்கள், அறநிறுவனங்கள் மற்றும் திருமடங்கள் வாரியத்தால் கண்காணிக்கப்பட்டு வந்தது. 1951ல் இந்து சமய அறநிலைய வாரியம் கலைக்கப்பட்டு அரசுத் துறையாக செயல்பட வழிவகை செய்யப்பட்டது. 1959- ஆம் ஆண்டிலிருந்து அமலில் இருந்த இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் நடைமுறைபடுத்துவதில் சில இன்னல்கள் ஏற்பட்டது. இவற்றினை சரி செய்யவும் பல்வேறு திருத்தங்களை ஒருங்கிணைக்கவும் 1959-ஆம் ஆண்டில் இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் 22/1959 இயற்றப்பட்டது. 01.01.1960 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1959-ஆம் ஆண்டு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தில் காலத்திற்கேற்ப சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இச்சட்டத்தின் மூலம் நிர்வாகத்தினை விரிவுபடுத்தி ஆணையர் மற்றும் சார்நிலை அலுவலர்களின் அதிகார வரம்புகளை வரையறுத்து திருக்கோயில்கள் மற்றும் அறநிறுவனங்களை கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டது.
இந்து சமய நிறுவனங்களின் நிருவாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின்(திருத்தப்பட்ட சட்டம் 39/1996) கீழ் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக இந்திய ஆட்சி பணி (I.A.S.) அலுவலர் ஒருவரை ஆணையராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.துறையின் பொது நிருவாகம் மற்றும் அனைத்து செயல்பாடுகளுக்கு தலைமைப் பொறுப்பில் ஆணையர் உள்ளார்.ஆணையர், அலுவலர்கள், சார்நிலை அலுவலர்கள், செயல் அலுவலர்கள், அயல்பணி அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளடங்கிய 2409 அங்கீகிரிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. தற்போது 1336 பணியாளர்கள் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர். ஆணையருக்கு உதவியாக தலைமையிடத்தில் பல்வேறு அலுவலர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் விவரம் பின்வருமாறு:
வ.எண். |
பதவி |
பணியிடங்கள் |
துறை |
---|---|---|---|
1. |
தனிஅலுவலர் (திருக்கோயில்நிலங்கள்) (மாவட்டவருவாய்அலுவலர்நிலை) |
2 |
வருவாய்த்துறை |
2. |
கண்காணிப்புப்பொறியாளர் |
1 |
நெடுஞ்சாலைத்துறை / பொதுப்பணித்துறை |
3. |
செயற்பொறியாளர் |
1 |
நெடுஞ்சாலைத்துறை / பொதுப்பணித்துறை |
4. |
உதவிக்கோட்டப்பொறியாளர் |
1 |
நெடுஞ்சாலைத்துறை / பொதுப்பணித்துறை |
5. |
உதவிப்பொறியாளர் |
2 |
நெடுஞ்சாலைத்துறை / பொதுப்பணித்துறை |
6. |
உதவிப்பொறியாளர் (மின்) |
1 |
மின்துறை |
7. |
முதுநிலைவரைதொழில்அலுவலர் |
1 |
நெடுஞ்சாலைத்துறை / பொதுப்பணித்துறை |
8. |
இளநிலை வரைதொழில்அலுவலர் |
2 |
நெடுஞ்சாலைத்துறை / பொதுப்பணித்துறை |
9. |
வரைதொழில்அலுவலர் |
2 |
நெடுஞ்சாலைத்துறை / பொதுப்பணித்துறை |
10. |
முதுநிலைகணக்குஅலுவலர் |
1 |
கருவூலக்கணக்குத்துறை |
11. |
உதவிகணக்குஅலுவலர் |
1 |
கருவூலக்கணக்குத்துறை |
12. |
தலைமைத்தணிக்கைஅலுவலர் (அரசுதுணைச்செயலாளர்நிலை) |
1 |
நிதித்துறை |
இந்து சமய அறநிலையத்துறையின் பொது நிருவாகம், பணியாளரமைப்பு, சமயநிறுவனங்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மேலாண்மை, திருப்பணி, வழக்குகள், தணிக்கை போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஆணையருக்கு உதவியாக தலைமையிடத்தில் பல்வேறு அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.
மாநில அளவில் 11 மண்டலங்களையும் மாவட்ட அளவில் 28 கோட்டங்களையும் உள்ளடக்கி ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஓர் இணை ஆணையரும், ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஓர் உதவி ஆணையரும் நியமிக்கப்பட்டு இந்து சமய நிறுவனங்களின் நிருவாகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவற்றின் விவரம் பின்வருமாறு:
வ. எண். |
மண்டலம் |
கோட்டம் |
ஆளுகை எல்லை |
---|---|---|---|
1 |
இணை ஆணையர், சென்னை |
1. உதவி ஆணையர், சென்னை |
சென்னை மாவட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் மாதவரம், அம்பத்தூர், திருவொற்றியூர் வட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் வட்டங்கள் |
2. |
இணை ஆணையர், வேலூர் |
2. உதவி ஆணையர், திருவள்ளூர் |
திருவள்ளூர் மாவட்டம் (மாதவரம், அம்பத்தூர், திருவொற்றியூர் வட்டங்கள் நீங்கலாக) |
3. உதவி ஆணையர், காஞ்சிபுரம் |
காஞ்சிபுரம் மாவட்டம்(தாம்பரம் , ஆலந்தூர், சோழிங்கநல்லூர் வட்டங்கள் நீங்கலாக) |
||
4. உதவி ஆணையர், வேலூர் |
வேலூர் மாவட்டம் |
||
3. |
இணை ஆணையர், சேலம் |
5. உதவி ஆணையர் தருமபுரி |
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் |
6. உதவி ஆணையர், சேலம் |
சேலம் மாவட்டம் |
||
7. உதவி ஆணையர், நாமக்கல் |
நாமக்கல் மாவட்டம் |
||
4. |
இணை ஆணையர், கோயம்புத்தூர் |
8. உதவி ஆணையர், கோயம்புத்தூர் |
கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் |
9. உதவி ஆணையர், ஈரோடு |
ஈரோடு மாவட்டம் |
||
10. உதவி ஆணையர், திருப்பூர் |
திருப்பூர் மாவட்டம் |
||
5. |
இணை ஆணையர், தஞ்சாவூர் |
11. உதவி ஆணையர், தஞ்சாவூர் |
தஞ்சாவூர் மாவட்டம் (திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் வட்டங்கள் நீங்கலாக) |
12. உதவி ஆணையர், நாகப்பட்டினம் |
நாகப்பட்டினம் மாவட்டம் (சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி வட்டங்கள் நீங்கலாக) |
||
13. உதவி ஆணையர், திருவாரூர் |
திருவாரூர் மாவட்டம் |
||
6. |
இணை ஆணையர், மயிலாடுதுறை |
14. உதவி ஆணையர், கும்பகோணம் |
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம் வட்டங்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில்மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி வட்டங்கள் |
7. |
இணை ஆணையர், விழுப்புரம் |
15. உதவி ஆணையர், கடலூர் |
கடலூர் மாவட்டம் |
16. உதவி ஆணையர், விழுப்புரம் |
விழுப்புரம் மாவட்டம் |
||
17. உதவி ஆணையர், திருவண்ணாமலை |
திருவண்ணாமலை மாவட்டம் |
||
8. |
இணை ஆணையர், திருச்சிராப்பள்ளி |
18. உதவி ஆணையர், திருச்சிராப்பள்ளி |
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
19. உதவி ஆணையர், அரியலூர் |
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் |
||
20. உதவி ஆணையர், புதுக்கோட்டை |
புதுக்கோட்டை மாவட்டம் |
||
21. உதவி ஆணையர், கரூர் |
கரூர் மாவட்டம் |
||
9. |
இணை ஆணையர், மதுரை |
22. உதவி ஆணையர், மதுரை |
மதுரை மாவட்டம் |
23. உதவி ஆணையர், திண்டுக்கல் |
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்கள் |
||
10. |
இணை ஆணையர், சிவகங்கை |
24. உதவி ஆணையர், விருதுநகர் |
விருதுநகர் மாவட்டம் |
25. உதவி ஆணையர், பரமக்குடி |
சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் |
||
11. |
இணை ஆணையர், திருநெல்வேலி |
26. உதவி ஆணையர், திருநெல்வேலி |
திருநெல்வேலி மாவட்டம் |
27. உதவி ஆணையர், தூத்துக்குடி |
தூத்துக்குடி மாவட்டம் |
||
28. உதவி ஆணையர், நாகர்கோயில் |
கன்னியாகுமரி மாவட்டம் |
இது தவிர, களப்பணியில் வருவாய்த்துறை வட்ட அடிப்படையில் 224 ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர்.
பழநி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம், திருத்தணிஆகிய திருக்கோயில்களின் இணை ஆணையர் நிலை / செயல் அலுவலர்களுக்கு உதவியாக, உதவி ஆணையர் நிலையில் நேர்முக உதவியாளர் பணியிடங்கள் 5 ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5 நேர்முகஉதவியாளர்கள் இந்த பணியிடங்களில் பணிபுரிகின்றனர்.
ஆபரணங்கள் மற்றும் இதர விலையுயர்ந்த பொருட்களை மதிப்பீடு செய்வதற்காக தலைமையிடத்தில் இணை ஆணையர் நிலையில் ஒரு சரிபார்ப்பு அலுவலரும், ஏழு இணை ஆணையர் மண்டலங்களுக்கு துணை ஆணையர் நிலையில் ஆறு சரிபார்ப்பு அலுவலர்களும், நான்கு இணை ஆணையர் மண்டலங்களுக்கு உதவி ஆணையர் நிலையில் நான்கு சரிபார்ப்பு அலுவலர்களும் பணிபுரிகின்றனர்.
இந்து சமய நிறுவனங்களின் கணக்குகளைத் தணிக்கை செய்ய தலைமைத் தணிக்கை அலுவலருக்கு உதவியாக இரண்டு துணைத் தலைமைத் தணிக்கை அலுவலர்கள், 18 மண்டலத் தணிக்கை அலுவலர்கள், 28 உதவித் தணிக்கை அலுவலர்கள் பணிபுரிகின்றனர். இணை ஆணையர் நிலை செயல் அலுவலர்கள் உள்ள எட்டு திருக்கோயில்களில் இவர்களுக்கு உதவியாக எட்டு மண்டலத் தணிக்கை அலுவலர்கள் முதுநிலை கணக்கு அலுவலர்களாகப் பணிபுரிகின்றனர்.
திருக்கோயில்களின் திருப்பணிகளான, புதுப்பித்தல் / பழமை மாறாமல் புனரமைத்தல், கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளல், மதிப்பீடுதயாரித்தல், கூர்ந்தாய்வுசெய்தல், பணிகளை மேற்பார்வையிடல், அளவீடு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பொறியாளர்கள் மற்றும் வரைதொழில் அலுவலர்கள் தலைமையிடத்தில் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு இணை ஆணையர் அலுவலகத்திலும் (விழுப்புரம் மண்டலம் தவிர) ஒரு உதவிக் கோட்டப்பொறியாளரும், ஒரு இளநிலை வரைதொழில் அலுவலரும் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு உதவி ஆணையர் அலுவலகங்களில் உதவிப் பொறியாளர்கள் பணிபுரிகின்றனர்.
திருச்சி, சேலம், மதுரை ஆகிய இணை ஆணையர் மண்டலங்களில் ஒரு செயற்பொறியாளர் வீதம் மூன்று செயற்பொறியாளர்கள் மற்றும் ஒரு மின் உதவிப்பொறியாளர் வீதம் மூன்று மின் உதவிப்பொறியாளர்கள் உள்ளனர்.
இது தவிர, பழநி, சமயபுரம், மதுரை, திருத்தணி, பண்ணாரி, மருதமலை, ஆனைமலை, அழகர்கோவில், திருவேற்காடு மற்றும் சுவாமிமலை ஆகிய திருக்கோயில்களை பாதுகாத்துப் புதுப்பிக்கவும் புதிய பணிகளை மேற்கொள்ளவும் திருக்கோயில்களைச் சார்ந்த பொறியாளர்கள் பணிபுரிகின்றனர்.
மேலும் ஸ்ரீரங்கம், பழநி, திருச்செந்தூர், திருத்தணி, திருவண்ணாமலை, சுசீந்திரம், மற்றும் திருவாரூர் ஆகிய திருக்கோயில்களில் பொதுப்பணித்துறை மூலம் உதவிக் கோட்டப்பொறியாளர்கள் அயற்பணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் ஒரு முதுநிலை வரைதொழில் அலுவலர் பணியிடம் வீதம் நான்கு பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில், அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நான்கு வரைதொழில் அலுவலர்கள் பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டு சென்னை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய நான்கு இணை ஆணையர் மண்டலங்களில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிகின்றனர்.
திருக்கோயில்களின் வருமானம், அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள், அவற்றின் முக்கியத்துவம், பணிச்சுமை மற்றும் இதர பணிகளைக் கருத்திற் கொண்டு திருக்கோயில்களின் நிருவாகத்தைச் செம்மையுடன் நிர்வகிக்க செயல் அலுவலர் பணியிடங்கள் பல்வேறு நிலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு :
வ.எண். |
நிலை |
பணியிடங்கள் |
1. |
இணைஆணையர் / செயல்அலுவலர் |
11 |
---|---|---|
2. |
துணைஆணையர் / செயல்அலுவலர் |
9 |
3. |
உதவிஆணையர் / செயல்அலுவலர் |
27 |
4. |
செயல்அலுவலர்நிலை 1 |
66 |
5. |
செயல்அலுவலர்நிலை 2 |
112 |
6. |
செயல்அலுவலர்நிலை 3 |
250 |
7. |
செயல்அலுவலர்நிலை 4 |
154 |
கூடுதல் |
629 |
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 56 திருமடங்கள் மற்றும் 19 திருமடங்களுடன் இணைந்த குறிப்பிட்ட கட்டளைகளும் உள்ளன. இத்திருமடங்களின் நிருவாகத்தைக் கண்காணிக்க ஒரு மண்டலத் தணிக்கை அலுவலர், ஒரு கண்காணிப்பாளர், இரண்டு ஆய்வாளர்கள், இரண்டு தணிக்கை ஆய்வாளர்கள், இரண்டு உதவியாளர்கள் ஆகியோர் ஆணையருக்கு உதவியாகத் தலைமையிடத்தில் பணிபுரிகின்றனர்.
1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தில் இந்து சமய நிறுவனங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்க உயர்நிலை ஆலோசனைக்குழு அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தகுழு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தலைவராகவும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களை துணைத்தலைவராகவும், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை அரசுச்செயலாளர் அலுவல்சார் உறுப்பினராகவும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவல்சார் உறுப்பினர் – செயலராகவும் மற்றும் 9 நபர்களுக்கு மிகாமல் அலுவல்சாரா உறுப்பினர்களையும் கொண்டதாகும்.
இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டப் பிரிவு 46(iii)-ன் கீழ் உள்ள பத்து இலட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறும் இந்து சமய நிறுவனங்களுக்கு ஐந்து பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் அரசால் நேரடியாக நியமிக்கப்படுவர்.
இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டப்பிரிவு 46(ii)-ன் கீழ் உள்ள இரண்டு இலட்சம் ரூபாயிலிருந்து பத்து இலட்சம் ரூபாய்க்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறும் இந்து சமய நிறுவனங்களுக்கு மூன்று பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் ஆணையரால் நியமிக்கப்படுவர்.
31. இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டப்பிரிவு 46(i)-ன் கீழ் உள்ள பத்தாயிரம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய்க்குக் குறைவாக ஆண்டு வருமானம் பெறும் இந்து சமய நிறுவனங்களுக்கு மூன்று பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் அந்தந்த மண்டல இணை ஆணையரால் நியமிக்கப்படுவர்.
இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டப்பிரிவு 49(1)-ன் கீழ் உள்ள பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் பெறும் இந்து சமய நிறுவனங்களுக்கு மூன்று பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் அந்தந்த மாவட்ட உதவி ஆணையரால் நியமிக்கப்படுவர்.